Posted by : ஆனந்த் சதாசிவம் Monday, November 11, 2013


இன்றைய தொழில்நுட்ப உலகில் எந்த வேலையாக இருப்பினும் கணனி முன்பு அதிக நேரம் செலவிட வேண்டி இருக்கிறது.
இதனால் கணனியின் பயன்பாடுகள் அதிகம் கொண்டவர்கள், உடல் நலத்திலும் அக்கறை எடுத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது.
1. முதலில் அதிக நேரம் கணனியை பார்ப்பவர்கள் கண்கள் மேல் கவனம் செலுத்த வேண்டும். மிக பக்கத்தில் இருந்து கணனி திரையில் வெளிச்சத்தினை பார்ப்பதால், கண்கள் பாதிப்படைய நிறைய வாய்ப்பிருக்கிறது.
இதனால் 15 நிமிடத்திற்கு ஒருமுறை கண்களுக்கு ஒய்வு கொடுப்பது நல்லது. அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு இது சாத்தியப்படாது. இதற்கும் வழி இருக்கிறது. உள்ளங்கையை கண்கள் மேல் வைத்து ஒரு இரண்டு நிமிடம் ஒய்வு கொடுக்கலாம். இது ஓரளவு கண்களை பாதிப்பில் இருந்து காப்பாற்றும்.
2. தொடர்ந்து கணனி முன்பு வேலை செய்யும் நபர்கள், பத்து நிமிடத்திற்கொரு முறை கைகளையும், உடலையும் நீட்டி மடக்கி சிறிய உடற்பயிற்சி செய்து கொள்வது மிக நல்லது.
3. கணனியின் முன் அமர்ந்து டைப் செய்கையில் உடலை நேர்கோட்டில் வைத்திருப்பது மிக அவசியமான ஒன்று. இதனால் முதுகுத்தண்டு நேராக இருக்கும். இது போல் செய்வதால் உடல் வலி அதிகம் வருவதை குறைக்கலாம்.
4. பாதங்களை தரை மீது சமமாக வைத்திருப்பது இன்னும் சிறந்தது. உடலின் அனைத்து பலமும் பாதத்தின் மேல் இருப்பதால், பாதத்தினை சமநிலையில் வைத்து கொள்ள வேண்டும்.
5. டைப் செய்யும் போது முழங்கைகள், இடையின் பக்கத்தில் வைத்திருப்பது கைகளுக்கு சிறப்பாக சப்போர்ட் கொடுக்கும். இதனால் சரியான முறையில் அமர்ந்து டைப் செய்ய முடியும். அதோடு தோள்பட்டை வலியினையும் எளிதாக குறைக்க முடியும்.
6. கணனி திரையின் வெளிச்சத்தினை குறைத்து வைத்து கொள்வது மிக அவசியமான ஒன்றாகும். இதனால் கண்களை எளிதாக பாதுகாக்கலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்