Posted by : ஆனந்த் சதாசிவம் Monday, July 21, 2014


காய்ச்சலைக் குறைக்க வெங்காயத்தைப் பிழிந்து தண்ணீர் சேர்த்து சாறாக மாற்றி அருந்தலாம். இது கைகண்ட மருந்து. குறிப்பாக காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் முப்பது கிராம் வெங்காயத்தில் ஏழு அல்லது எட்டு மிளகை வைத்து அரைத்து இந்தத் துவையலைச் சாப்பிட்டால் காலரா நோயாளியின் தாக்கமும் தணியு[ம். மனப் படபடப்பும் குறைந்து அமைதியாகத் தூங்குவர். காய்ச்சலின் போது திட உணவு சாப்பிடும் வகையில் நோயாளி திடகாத்திரமாக இருந்தால் உணவுப் பாதைக்கு அதிகம் சிரமம் தராத உணவு வகைகளைத் தேர்வு செய்யவேண்டும். காய்ச்சிய அரிசிக் கஞ்சி, பார்லி, வெந்தயக்கீரை, காய்கறி, சூப், பால், தயிர், முட்டை, இட்லி, இளநீர், கரும்புச்சாறு முதலியவற்றைச் சாப்பிடலாம். இவை உணவுப் பாதைக்குச் சிரமம் தராதவை. காய்ச்சல் குறைய ஆரம்பித்த இரண்டொரு நாளிலிருந்தே சாத்துக்குடிச் சாறை மட்டும் தவறாமல் அருந்த வேண்டும். இது உடலுககுப் புத்துணர்ச்சி ஊட்டும். எனவே இரண்டு வேளையாவது சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

காலையில் பெட் காப்பி போல் அடுத்த சில வாரங்களுக்கு எலுமிச்சை, தேன், தண்ணீர் சேர்ந்த சர்பத்தை அருந்தி வரவேண்டும். எல்லாவற்றையும்விட முக்கியமானது, படுக்கையில் முழு ஓய்வு எடுப்பது!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்