- Back to Home »
- பீர் »
- கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
Posted by :
ஆனந்த் சதாசிவம்
Wednesday, August 28, 2013
* பீர் வைத்து கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம் என்று கூறியதும், பலர் முகம் சுளிப்பதை காணலாம். ஆனால் இந்த பீர் முடி உதிர்வை தடுப்பதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. பீரை வைத்து பட்டுப்போன்று கூந்தலை வளர்க்கலாம். அதற்கு வெங்காயச்சாற்றுடன், ஒரு கப் பீர் மற்றும் சிறிது தேங்காய் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு கலந்த இந்த கலவையை கூந்தலில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் ஒரு மணிநேரம் கழித்து, தரமான ஷாம்பு போட்டு சுத்தமான நீரால் அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் ஒரு முறை செய்தால் கூந்தல் உதிராமல், பட்டுப் போன்று வளரும்.
* குளிக்கும் போது ஷாம்புவை கப்பில் போட்டு, அதில் பீர் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தாலும் கூந்தல் ஆரோக்கியமாக வளர்வதோடு, பட்டுப் போல மின்ன தொடங்கும்.

