Posted by : ஆனந்த் சதாசிவம் Wednesday, August 28, 2013


இயற்கையின் கொடையான டீ-யில் இருப்பது புத்துணர்ச்சி மட்டுமல்ல; ஏராளமான நன்மையும்தான். குறிப்பா, கிரீன் டீ-யில அதிக நன்மைகள்  இருக்குதுங்க. கேன்சர், இதய  நோய்கள் வராம தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது கிரீன் டீ. இத தொடர்ந்து குடிச்சிட்டு வந்தா கொழுப்பு கரைஞ்சு  சிலிம் ஆகலாம்ங்க. மேலும், சக்கர நோய் வராம காக்குதுங்க. ரத்த அழுத்தத்த கட்டுப்படுத்தும் குணம் இதுக்கு உண்டு.

உடம்பில் உள்ள கொழுப்புகளின் சிதைவை வேகப்படுத்தி, கார்போஹைட்ரேட்ஸ் எனப்படும் மாவுப் பொருட்களின் செரிமானத்தை மந்தப்  படுத்தவும்செய்வதால் ஒபிஸிட்டி எனப்படும் உடற்பருமனை குறைக்கிறது. தோலில் சீக்கிரமே சுருக்கம் வந்து முதுமையடைவதை தடுப்பதில் கிரீன்  டீ முக்கிய பங்கு வகிக்கிறது. பல்வேறு நோய்களையும், வயோதிக தன்மையையும் ஏற்படுத்தும் அணுக்களுக்கு எதிராக செயல்படும்  மூலப்பொருளுளான கேக்டிக்கைன்ஸ் அதிக அளவு கிரீன் டீ யில் காணப்படுகிறது.

கிரீன் டீ இலைகள் அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு,முக வசீகரத்தைத் தருவதோடு புற ஊதாக் கதிர் வீச்சிலிருந்தும் காக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திய அதிகப்படுத்தி நோய்கள் வராம பாதுகாக்குதுங்க. நோய் தொற்று கிருமிகள நம்மிடம் அண்டவிடுவதில்லை. பற்களை  பாதுகாக்கும் தன்மை கொண்டது. மனச்சோர்வில் இருந்து நம்மள விடுவிக்குது. தலைவலிய போக்குதுன்னு... கிரீன் டீ-யில ஏகப்பட்ட நன்மைகள்  உண்ங்க. மது, குளிர்பானம்னு ஏகப்பட்ட செலவு செய்யுற நாம, உடல் நலத்துக்கு பயனுள்ள கிரீன் டீயையும் சாப்பிடலாமே.

{ 1 comments ... read them below or add one }

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்