Posted by : ஆனந்த் சதாசிவம் Wednesday, November 13, 2013


பெரும்பாலானோர் பொடுகு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிகளவு கூந்தல் உதிர்வதால் நாளடைவில் வழுக்கை விழும்.
பொடுகு ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தலையில் போதிய எண்ணெய் இல்லாததால் தான்.
பொடுகு வந்து விட்டால் கூந்தல் உதிர்வது அதிகமாவதுடன், சருமத்திற்கும் பரவி விடும். எனவே உடனடியாக பொடுகை முற்றிலும் நீக்க வேண்டும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சை சாறு
தலையில் இருந்து செதில் செதிலாக வருவதை தவிர்க்க வேண்டுமெனில் எலுமிச்சை தான் சிறந்த பொருள்.
அதற்கு எலுமிச்சை சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து குளித்து பின் ஸ்கால்ப்பில் சிறிது எண்ணெய் தடவினால், ஸ்கால்ப் வறட்சியடைவதை தவிர்க்கலாம்.
தேங்காய் பால்
தேங்காய் பாலும் பொடுகில் இருந்து நிவாரணம் தரக்கூடியவையே. அதற்கு தேங்காய் பாலை தலையில் தடவி மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும்.
கற்றாழை
கற்றாழை ஜெல் சருமத்திற்கு மட்டும் நல்ல பலனைத் தருவதில்லை, கூந்தலுக்கும் தான். அதிலும் கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் போது ஸ்கால்ப்பில் தடவி, கவர் கொண்டு மூடி, காலையில் எழுந்து குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இதனால் கற்றாழையில் உள்ள ஈரப்பதமானது, தலையில் இறங்கி வறட்சியைத் தடுக்கும்.
நல்லெண்ணெய்
வாரம் ஒரு முறை நல்லெண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால், பொடுகு நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக வளரும்.
ஆலிவ் ஆயில்
ஆலிவ் ஆயிலுக்கும் ஸ்கால்ப்பில் இருந்து வெளிவரும் செதிலை போக்கும் தன்மை உள்ளது. ஆகவே ஆலிவ் ஆயிலை தலையில் தடவி மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வெங்காயம்
வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
தயிர்
தயிரில் சிறிது மிளகு தூள் சேர்த்து கலந்து, உச்சந்தலையில் படும்படி தேய்த்து, 20-30 நிமிடம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்தால் பொடுகு படிப்படியாக நீங்கும்.
பச்சை பயறு மாவு
பச்சை பயறு மாவில் தயிர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, ஸ்கால்ப்பில் படும்படியாக தேய்த்து ஊற வைத்து குளித்தால் பொடுகு மறைந்துவிடும்.
வசம்பு
வசம்பை நன்கு பொடி செய்து அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் போட்டு ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
மருதாணி இலை
மருதாணி இலையை அரைத்து அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, தலைக்கு தடவி குளிக்க வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, நரைமுடியின் நிறமும் மாறும்.
முட்டை
முட்டையின் வெள்ளைக்கருவில் தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு நீங்கும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்