Posted by : ஆனந்த் சதாசிவம் Monday, November 11, 2013


உடல் பருமன் அதிகமாக உள்ளது என்பதற்காக, உணவில் மிகவும் கட்டுப்பட்டுடன் இருக்க வேண்டியுள்ளது.
அவ்வாறு உடல் எடையை குறைக்க டயட்டில் இருக்கும் போது உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளும் வகையில், உடலுக்கு தேவையான ஒரு சில சத்துக்களை தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதில் மிகவும் முக்கியமான சத்துக்களான கார்போஹைட்ரேட், புரோட்டீன், வைட்டமின்கள், கொழுப்புகள், இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்றவற்றை தினமும் உடலில் சேர்க்க வேண்டும்.
அவ்வாறு சேர்த்தால் தான் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் நன்கு இயங்கும். மற்ற சத்துக்களை சேர்க்கின்றோமோ இல்லையோ, மறக்காமல் இரும்புச்சத்தை சேர்க்க வேண்டும்.
ஏனெனில் அப்போது தான் உடலில் போதுமான அளவு இரத்த அணுக்களின் எண்ணிக்கை இருக்கும. இல்லையெனில் அனீமியா போன்ற நோய்க்கு தான் ஆளாக நேரிடும்.
டார்க் சொக்லேட்: சொக்லேட்டில் நிறைய நன்மைகள் உள்ளன. அதிலும் 100 கிராம் டார்க் சொக்லேட்டில் 36 மில்லி கிராம் இரும்புச்சத்து அடங்கியுள்ளது.
இதனால் சுவையுடன் இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தினமும் ஒரு துண்டு டார்க் சொக்லேட் சாப்பிட்டால், இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்கும்.
கீரைகள்: உடல் ஆரோக்கியத்திற்கு கீரை ஒரு சிறந்த உணவுப் பொருள். இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. அதிலும் 1/2 கப் கீரையில் 3.2 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே தினமும் ஏதேனும் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டால் நல்லது.
இறைச்சி: அசைவ உணவுகளில் மாட்டுக்கறியில் அதிக அளவு இரும்புச்சத்து அடங்கியுள்ளது. மற்ற இறைச்சியை விட இந்த இறைச்சியின் 100 கிராமில் 2.5-3 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
இந்த உணவும் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. முக்கியமாக இந்த உணவை அதிக அளவு சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
பூசணிக்காய்: பூசணிக்காயை சமைத்து சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும். அதிலும் அதன் விதையின் சுவைக்கு அளவே இல்லை.
மேலும் இந்த விதையை தினமும் வறுத்தோ அல்லது பொடி செய்தோ உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால், உணவு சுவையாக இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் ஒரு கைப்பிடி பூசணிக்காய் விதையில் 4 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.
பருப்பு வகைகள்: பருப்பு வகைகளான பீன்ஸ், அவரை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. அதிலும் 100 கிராம் பருப்பில் 5 மில்லி கிராம் இரும்புச்சத்து இருக்கிறது.
அதிலும் இத்தகைய பருப்பை தினமும் வித்தியாசமான முறையில் சமைத்து சாப்பிட்டால், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைப்பதோடு இரத்த ஓட்டமும் சீராகும்.
சிப்பிகள்: கடல் உணவுகள் உடலுக்கு மிகவும் நல்லது. அதில் ஒன்றான சிப்பிகள்(Oysters) மிகவும் சிறந்தது.
அதிலும் 100 கிராம் சிப்பிகளில் 6 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. ஆகவே முடிந்த அளவு இதனை வாரத்திற்கு ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்