- Back to Home »
- காய்கறிகளும் அதன் மகத்துவமும் »
- அதிக இரும்பு சத்துப் பெற பீட்ரூட்..!
Posted by :
ஆனந்த் சதாசிவம்
Tuesday, October 8, 2013
பீட்ரூட் காய்கறியில் உயர்தர இரும்புச்சத்து அடங்கியுள்ளது. இதனை உட்கொள்ளும் போது அது அதிக அளவு ஹீமோகுளோபினை உற்பத்தி செய்கிறது. ரத்த உற்பத்தியும் அதிகரிக்கிறது. அன்றாட உணவில் பீட்ரூட் சேர்த்துக் கொள்வது அவசியம் அதோடு வைட்டமின் `சி' சத்து அடங்கிய காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் இரும்புச்சத்து உடலில் கிரகித்துக் கொள்ளப்படும்.