- Back to Home »
- மருத்துவ குறிப்புகள் »
- அதிகப்படியான வியர்வையைக் குறைக்க
Posted by :
ஆனந்த் சதாசிவம்
Tuesday, October 1, 2013
அதிகப்படியான வியர்வையைக் குறைக்கும் தன்மை காக்கரட்டான் கொடிக்கு உண்டு. காக்கரட்டான் என்பதை சங்குப் பூக் கொடி என்றும் நாம் அழைக்கின்றோம்.
இதில் இரண்டு வகைகள் உண்டு. நீல நிற சங்குப் பூ பூக்கும் கொடியை கறுப்பு காக்கரட்டான் என்றும், வெள்ளைப் பூ பூக்கும் கொடியை வெள்ளை காக்கரட்டான் என்றும் அழைப்பர்.
நீல நிற காக்கரட்டானை விட, வெள்ளை நிற காக்கரட்டானுக்கு மருத்துவ குணங்கள் அதிகம். இந்தப் பூவை விநாயகருக்கு படைத்தும் நாம் வழிபடுகிறோம்.
சிலருக்கு உள்ளங்கை, கால் என அதிகப்படியான வியர்வை சுரப்பு இருக்கும். இப்படிப்பட்டவர்களுக்கு காக்கரட்டான் இலைச்சாறு, இஞ்சிச் சாறு, தேன் ஆகிய மூன்றையும் சம அளவாக எடுத்து கலந்து 1 தேக்கரண்டியளவு (5 மில்லி) தினமும் 2 வேளை குடித்து வர உடல் சூடு தணியும். இதனால் அதிகப்படியான வியர்வை கட்டுப்படும்.

