- Back to Home »
- இயற்கை »
- வேர்க்கடலையின் மகத்துவம்
Posted by :
ஆனந்த் சதாசிவம்
Tuesday, October 1, 2013
உயர்ந்த புரத சத்து நிறைந்த உணவில் சோயா பீன்சிற்கு அடுத்தபடியாக வேர்க்கடலை இடம்பெறும். அதில்லாமல், பாஸ்பரஸ், கால்சிம், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ, நியாஸின் போன்ற வைட்டமின்களும் அதிகப்படியாக வேர்க்கடலையில் இடம்பெற்றுள்ளது.
எல்லாவிதமான ரத்தப்போக்கை தடுக்கும் சக்தியும் வேர்க்கடலைக்கு உண்டு. அதனால், பெண்கள் மாதவிடாய்க் காலத்தில் வேர்கடலை சாப்பிடுவது நல்லது.
வயிற்றில் பிரச்சினை உள்ளவர்கள், உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சாப்பாட்டு நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு கைப்பிடி அளவு வறுத்த வேர்கடலையைச் சாப்பிடலாம். வேர்க்கடலை சாப்பிட்டதும், சர்க்கரை சேர்க்காத காபி அல்லது டீ அருந்தவும். பசித்த பிறகு சாப்பிடச் சென்றால் குறைவான அளவே சாப்பிட முடியும். இதனால் உடல் எடை குறையும்.
வேர்க்கடலையில் உள்ள நியாஸின், தோலில் உள்ள புண்கள், கொப்புளங்கள் ஆற உதவுவதோடு, இவை வராமல் முன்கூட்டியே தடுக்கவும் செய்கிறது. தோலை பளபளப்பாக்குவதிலும் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு இருக்கிறது.