Posted by : ஆனந்த் சதாசிவம் Wednesday, August 21, 2013



காது, மூக்கு, தொண்டையை குளிர் அதிகம் தாக்குகிறது. குளிர்கால பிரச்னைகளில் இருந்து காத்துக் கொள்வது பற்றி விளக்குகிறார் இ.என்.டி. டாக்டர் சாந்தி செல்வரங்கம்.


குளிர் காலத்தில் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை தொற்று நோய்கள் எளிதில் தாக்குகிறது. அவர்களிடம் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான் காரணம்.

இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகம் இருப்பதால் இந்த நேரத்தில் மூச்சு திணறல், சளி என பிரச்னைகள் துவங்கும். எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பட்சத்தில் இதுவே காய்ச்சலாக மாறும். அதைத் தடுக்க இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர் தாக்காத வண்ணம் காதுகளை மூடிக் கொள்ளலாம்.

குடிக்கும் தண்ணீர் சுத்தமானதாக இல்லாவிட்டால் தொண்டையில் நோய்த் தொற்று ஏற்பட்டு தொண்டை கட்டும். பேசுவதில் சிரமம் ஏற்படும். இருமல், வலியும் இருக்கும். ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அவசியம். கண்டுகொள்ளாமல் விட்டால் காய்ச்சலுடன் தொண்டை வலி, மூக்கு அடைப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்னைகளும் ஒட்டிக் கொள்ளும்.

பனிக்காலத்தில் ஏற்படும்  சளி பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது சைனசாக மாறுகிறது. மூக்கின் காற்றறைகளில் சளி சேருவதால் சைனஸ் பிரச்னை உண்டாகிறது. இதற்கு சுய மருத்துவம் செய்து கொள்வது தவறு. அது நோயை முற்றிலும் குணப்ப டுத்தாமல் தலை வலியை உண்டாக்கும்.

சைனஸ் மற்றும் மூக்குத் தண்டு வளைவு உள்ளவர் களுக்கு குளிர்கால பிரச்னைகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். கைகளை கழுவிய பின்னரே எதையும் தொட வேண்டும். இதன் மூலம் வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு நோய் பரவாமல் தடுக்கலாம்.


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்