Posted by : ஆனந்த் சதாசிவம் Tuesday, August 27, 2013


வெள்ளரியில் மிகுந்துள்ள நீர்ச்சத்து, கடும் நாவறட்சியை விரட்டுவதோடு, பசியையும் உண்டாக்கும்,
உடலைக் குளிரவைக்கும்.

வெள்ளரியில் வைட்டமின்கள் ஏதுமில்லை. ஆனால் தாதுப்பொருட்களான சோடியம்,
கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்றவை
உண்டு.

இவற்றைவிட நம் இரத்தத்தில் சிவப்பணுக்களை உருவாக்கும் பொட்டாசியம் வெள்ளரியில்
மிகுதி. ஈரல், கல்லீரல் இவற்றில் சூட்டைத் தணிக்கும் ஆற்றல் வெள்ளரிக்கு இருப்பதால்
அப்பாகங்களில் ஏற்படும் நோய் தணியும்.

செரிமானம் தீவிரமாகும், பசி அதிகரிக்கும். வெள்ளரிக்காயை உண்ணுகையில் பசிரசம்
என்னும் விசேஷ ஜீரண நீர் சுரக்கிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.
புகைப் பிடிப்போரின் குடலை நிகோடின் நஞ்சு சீரழிக்கிறது. நஞ்சை நீக்கும் அற்புக
ஆற்றல் வெள்ளரிக்காய்க்கு உண்டு.

மூளைக்கு மிகச்சிறந்த வலிமை தரக்கூடியது வெள்ளரி. மூளை வேலை அதிகம் செய்து
கபாலம் சூடு அடைந்தவர்களுக்குக் குளிர்ச்சியும், மூளைக்குப் புத்துணர்ச்சியும்
வெள்ளரிக்காய் வழங்கும்.

நுரையீரல் கோளாறுகள், கபம், இருமல் உள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடுவது
நல்லதல்ல.


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்