- Back to Home »
- பரு , முகப்பரு »
- பரு மறைந்திட
Posted by :
ஆனந்த் சதாசிவம்
Wednesday, August 14, 2013
எலுமிச்சை சாறு :
எலுமிச்சையின் சாற்றினைக் கொண்டு, பரு உள்ள இடத்தில் தேய்த்து சிறிது நேரம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினாலும், பருக்கள் நீங்கிவிடும்.
பேக்கிங் சோடா:
பேக்கிங் சோடாவை, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பருக்கள் எளிதில் போய்விடும்.
தக்காளி:
தக்காளியும் சருமத்தை சுத்தப்படுத்தி, அழகாக வைத்துக் கொள்ள உதவும் சிறப்பான ஒரு பொருள். எனவே தினமும் தக்காளி துண்டைக் கொண்டு, சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவினால், முகப்பருக்களுடன், அதனால் ஏற்பட்ட தழும்புகளில் இருந்தும் விடுபடலாம்.
வாழைப்பழ தோல் :
வாழைப்பழத்தின் தோலை அரைத்து, அதில் சிறிது தயிர் சேர்த்து முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், முகப்பரு மற்றும் மற்ற சரும பிரச்சினைகளான பழுப்பு நிற சருமம் மற்றும் கரும் புள்ளிகளில் இருந்து விடை பெறலாம்.
தண்ணீர் குடிக்கவும் :
சருமம் பொலிவோடு இருக்க வேண்டுமெனில், உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்ற வேண்டும். அதற்கு தினமும் தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இதனாலும் பருக்களில் இருந்து தப்பிக்கலாம்.