- Back to Home »
- முடி உதிர்தலை தடுக் »
- முடி உதிர்தல்
Posted by :
ஆனந்த் சதாசிவம்
Thursday, August 22, 2013
ஒரு ஆரோகியமான உணவு, கால்சியம் மற்றும் இரும்புச் சத்து உள்ள உணவைச் சாப்பிட்டு வந்தால் முடி உதிர்தலை குறைக்கலாம். இந்த 15 வகை உணவு பழக்கத்தை மேற்கொண்டால் முடி உதிர்தலை தடுக்கலாம், அதிக விலைக் கொண்ட மருத்துகள் தேவை இல்லை.
உங்கள் முடி காய்ந்த வைக்கோல் போல் உதிர்க்கிறதா ? நீங்கள் என்ன
செய்வீ ர்கள் ?
பதட்டத்தில் விலை அதிகமுள்ள மருத்துகளை தேடி கண்டுப்பிடித்து முடி உதிர்தலை நிறுத்திவிடலாம் என்று புத்திசாலித் தனமாக சிந்திப்பிர்கள். ஆனால் அது உண்மை இல்லை, அந்த நேரத்தில் நீங்கள் சூழ்நிலையை புரித்து ஆரோக்கியமான முடிவை எடுக்க வேண்டும்.
முதலில், முடி உதிர்தல் எதனால் ஏற்படுக்கிறது என்று தெரிந்து
கொள்ளுங்கள்...
- ஒழுங்குமுறையற்ற உணவு பழக்கம் ,
- வைட்டமின்கள் பற்றாக்குறை,
- மரபணு வழியாக வரும் குறைபாடு,
- அளவுக்கதிகமான பதட்டம், கவலை மற்றும் மன அழுத்தம்,
- டைப்பாய்டு, ரத்தகுறைவு, சீத பேதி, மஞ்சட் காமாலை போன்ற நிண்ட கால நோய்கள்,
- குறைவான இரத்த ஓட்டம், மற்றும்
- தூய்மையற்ற உச்சந்தலை
இதில் இருக்கும் குறைபாடுகள் உங்களிடம் இருந்தால், அதை சரிச் செய்வது மூலம் முடி உதிர்தலை தடுக்கலாம். இந்த மாதிரி மோசமான நேரங்களில் முற்றிலும் இயற்கையின் மருந்துகளை கையாளுவது நல்லது. தயவுச் செய்து இரசாயன பொருட்களை நம்ப வேண்டாம். அவைகளில் நல்லதை விட தீங்கு விளைவிக்கும் இரசாயனம் அதிகம். முதலில் உங்கள் மன பதட்டத்தை ஒருமை படுத்துங்கள், பிறகு இந்த 15 வகையான பழக்க முறைகளை கையாளுவது மூலம் முடி உதிர்தலை தடுக்கலாம்:
- காலையில் எழுந்தவுடன் ஒரு டம்ளர் நீருடன் ஆளி விதையை(FLAX SEED) கலந்து குடிக்க வேண்டும், இதில் இருக்கும் OMEGA 3 ACID மூலம் முடி வளர உதவும்.
- தினமும் அம்லா(AMLA OIL) எண்ணெய் எடுத்து கொள்ள வேண்டும். பெரும்பாலும் பெண்கள் இந்த எண்ணெய் தான் உபயோகப்படுத்தீராகள் என்பது உங்களுக்கு தெரியுமா ?
- தினமும் இரவில் படுக்கும் முன் 5 பாதாம் பருப்பை நீரில் ஊற வைத்து உண்டால் தோல் சமந்தமான நோய்கள் வராது.
- உங்கள் உச்சந்தலைக்கு ஊட்டச்சத்துகள் தேவை, அதனால் மோர், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் தண்ணீர் போன்ற திரவங்களை நிறைய எடுத்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் 8 லிருந்து 10 முறையாவது டம்ளரில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
- ஒரு கிண்ணத்தில் முளைப்பயிர் பருப்பு வகைகள்(SPROUTED PULSES) எடுத்து கொள்ளுவது மிகவும் நல்லது.
- புரதங்கள் பெற தினமும் கோழி இறைச்சி அல்லது முட்டையை எடுத்து கொள்ளலாம்.
- நீங்கள் தினசரி உட்கொள்ளும் தேயிலை மற்றும் காபியை குறைத்து கொள்ள வேண்டும்.
- நீங்கள் முடி கழுவும் போது, கடைசி அலசுதலில் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி பயன்படுத்துங்கள். இதனால் பொடுகு வராமல் பாதுகாக்கும் உங்கள் தலைமுடி பளபளக்கும் ஒளியை பெரும்.
- தினமும் இரண்டு டம்ளர் பால் குடித்தால் அதிக பலன் கிடைக்கும்.
- ஒவ்வொரு வாரமும் ஒருமுறை அரை மணி நேரம் உங்கள் உச்சந்தலையில் METHI(வெந்தயம்) விதையின் பசையை தடவலாம், பிறகு வெற்று வயிற்றில் METHI தண்ணீரியை குடிக்க வேண்டும்.
- தினமும் 2 அல்லது 3 பழங்கள் சாப்பிட வேண்டும். அதாவது ஸ்ட்ராபெர்ரி, ஆப்பிள், வாழைபழம், மாம்பழம், சப்போட்டா மற்றும் திராட்சை.
- பச்சை காய்கறிகள் அதிகம் சாப்பிடக் வேண்டும்.
- கோழி, மீன்கள் மற்றும் முட்டை ஆகியவை முடி வளர உதவும்.
- மாட்டு மற்றும் செம்மறி ஆட்டு குட்டி இறைச்சியை தவிர்ப்பது நல்லது.
இன்று முடி உதிர்தல் என்பது பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக ஏற்படுக்கிறது. இளம் நரை, வழுக்கை போன்றவைகள் வராமல் தடுக்க மேற்கண்ட வழிமுறைகளை கடைப் பிடித்தல் வரும் வாய்ப்பை குறைக்கலாம்.