Posted by : ஆனந்த் சதாசிவம் Wednesday, August 28, 2013


நல்ல ரத்த உற்பத்திக்கும், ரத்த சுத்திகரிப்புக்கும் மிகவும் சிறந்ததாக விளங்குகின்றது புதினாக்கீரை. ஒரு வகையான நல்ல மணமுடைய  இந்தக்கீரையை மணத்துக்காகவும் சுவைக்காகவும் குழம்புகளில் சேர்ப்பதுண்டு. புதினாக்கீரையை துவையலாகச் செய்து சாப்பிட்டால் பலவிதமான  வயிற்றுக்கோளாறுகள் அகலும். கடுமையான வயிற்றுபோக்கினை நிறுத்தும் சக்தி புதினாவுக்கு உண்டு. 


கர்ப்பிணிபெண்களுக்கு அடிக்கடி வாந்தி ஏற்படுவதை தடுக்கவும் புதினாவை பயன்படுத்துவது உண்டு. பழுப்பு சர்க்கரையுடன் காடி சேர்த்து பாகாகக்  காய்ச்சி அதனுடன் புதினா இலைச் சாற்றை கலந்து வைத்துக்கொண்டு அடிக்கடி வாந்தி ஏற்படும் கர்ப்பிணிகளுக்கு இந்த பாகில் இரண்டொரு துளி  நாக்கில் விட்டு சப்பச்செய்தால் வாந்தி நின்று குணம் தெரியும். 



புதினாக்கீரையை கஷாயம் செய்தும் பயன்படுத்தலாம். புதினா இலைகளை சுத்தம் செய்து நைத்து நீர் விட்டு நீரை பாதியளவு சுண்டக்காய வைத்து  வடிகட்டி வைத்துக்கொள்ளவேண்டும். சிறு குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு, வாந்தி இருந்தால் இந்தப் புதினா கஷாயத்தில் வேளைக்கு இரண்டு  தேக்கரண்டி அளவுக்கு இரண்டு வேளை கொடுத்தால் நல்ல குணம் தெரியும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்