Posted by : ஆனந்த் சதாசிவம் Saturday, August 31, 2013

நீண்டகாலம் வாழ்ந்து, அவ்வையார் தமிழுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கில், தனக்கு கிடைத்த அரிய வகை நெல்லிக்கனியை, அவ்வையாருக்கு மன்னர் அதியமான் கொடுத்ததாக வரலாறு உண்டு. இவ்வளவு சிறப்பும், பயனும் உள்ள நெல்லிக்காயில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் - சி அதிகம் உள்ள இந்த நெல்லிகாய் உடலுக்கு எனர்ஜியை தரக்கூடியது. 

நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சர்க்கரை நோயாளிகள் நெல்லிக்கனியை தொடர்ந்து சாப்பிடலாம். கால்சியம், இரும்பு சத்துள்ள இந்த நெல்லிகாய் தலைமுடியை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.  தலைமுடி வேர்கள் வலுவாக இருக்க உதவுகிறது. முடி உதிர்வதை தடுக்கிறது. இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடைய இந்த நெல்லிக்காய் பார்வை குறைபாடு ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது. வயிற்றுபோக்கு ஏற்படாமல் தடுக்கிறது. 

கர்ப்பிணிப் பெண்களும், காய்ச்சல் உள்ளவர்களும் நெல்லிக்காயை உண்ணக் கூடாது என்பார்கள். இது திரிதோஷ சமணி, வாத, பித்த, சிலேத்துமங்களை சமநிலையில் வைக்கக் கூடியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு என்ற மூன்று சுவைகளும் முத்தோஷங்களை சமனப்படுத்தி, உடலைத் தேற்றுகிறது.

உடல் அசதி மற்றும் அஜிரணக் கோளாறுகளுக்கு இது கைகண்ட மருந்தாகும். அத்துடன் வாயுத் தொல்லைகளைப் போக்கக்கூடிய குணம் இதற்கு உண்டு. இரத்த உறைவினால் உண்டாகும் பல நோய்களைப் போக்கும் ஆற்றலும் முக்கியமாக பித்தத் தொடர்பான வியாதிகளுக்கு நெல்லிக்காய் லேகியம் தினசரி வெறும் வயிற்றில் உட்கொள்வதால் நல்ல பலன் பெறலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்