Posted by : ஆனந்த் சதாசிவம் Tuesday, August 27, 2013


முடி - கண் - வயிறு - நரம்பு - மூளை இவற்றிற்கு இன்றியமையாதது கறிவேப்பிலை. கறிவேப்பிலையினை வெயிலில் கருகச் செய்து தேங்காய் எண்ணெயுடன் பொடி செய்து கலந்து தேய்த்து வர இளம் நரை விலகும். கறிவேப்பிலை சாற்றினை பசும் பாலுடன் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளிப்பதன் மூலமும் நரை முடி வராமல் தடுக்கலாம்.
கறிவேப்பிலையில் வைட்டமின் அ சத்து மிகுந்து இருப்பதால் இது கண்ணுக்கு உரமாய் விளங்குகின்றது. தினமும் கறிவேப்பிலையினை அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது.
பசியினைத் தூண்டி, செரிமானத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் ஏற்படாது தடுப்பதில் கறிவேப்பிலைக்குத் தனிபங்கு உண்டு. கறிவேப்பிலை பொடியினை நெய் அல்லது நல்லெண்ணை சேர்த்து சோற்றுடன் பிசைந்து சாப்பிட்டால் செரிமான சக்தி அதிகரிக்கும். வயிற்றில் வாய்வு சேராது. மலச்சிக்கல் ஏற்படாது. பசியில்லையே என்று அலைமோதுபவர்கள், சாப்பிட்டில் மனம் செல்லாது விளையாடும் பிள்ளைகள் இவர்களுக்கு சிறந்த பசி தூண்டியாக கறிவேப்பிலை பயன்படுகிறது.
வாய்வு, சீதளம் காரணமாக இடுப்பு, கைகால், தொடை பகுதிகளில் பிடிப்பு வலி எற்படின் கறிவேப்பிலையுடன் துவரம்பருப்பு, இஞ்சி, சீரகம், பெருங்காயம் கலந்து பொடி செய்து உணவுடன் கலந்து சாப்பிட தொல்லைகள் தீரும்.
உடலுக்கு உற்சாகத்தை ஊட்டி தெம்பூட்டுவதில் கறிவேப்பிலை தன்னிரகரற்றது. மூளையினை முதலீடாகக் கொண்டு செயலாற்றும் ஆபீசர்கள் மூளை திசுக்களின் செயல்திறன் குன்றாமல் இருக்க கறிவேப்பிலையை மறந்து விடக்கூடாது.
சித்தப்பிரமை பிடித்தவர்களுக்கு கறிவேப்பிலையை மஞ்சள். சீரகத்துடன் கலந்து மோருடன் கலந்து 48 நாட்கள் பருகச் செய்தால் கைமேல் பலன் கிட்டும்.
மூலச்சூடு, கருப்பைச்சூடு ஆகியவற்றைப் போக்குவதில் கறிவேப்பிலை வல்லமை பெற்றதாகும் உடல் சூட்டினைத் தணித்து உடல் வளர்ச்சியைத் துரிதப்படுத்துகின்றது. இதனால் கண் முதல் கால் நகம் வரை ஊட்டம் பெறும். குடல் சூட்டினால் வயிற்றுப்புண், காலரா, அமீபியாசிஸ், சீதபேதி, இரத்தபேதி, வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்படுவர்கள் கறிவேப்பிலை பொடியுடன் வெந்தயம்சேர்த்து அரைத்து சாப்பிட்டு வர நிவராணம் துரிதமாகும்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்