Posted by : ஆனந்த் சதாசிவம் Wednesday, August 7, 2013

பழங்களும் அதன் பலன்களும் பற்றி மூன்று பதிவுகள் 
படித்திருப்பீர்கள் இது நாலாவது பாகம் .

நாரத்தம் பழம்:-


இரத்த விருத்தி உண்டாக்கும்.உடலுக்குக் குளிர்ச்சி தரும்.
பித்தம் போக்கும்.


தர்பூசணி பழம் :-


உடலுக்குக் குளிர்ச்சி தரும்.சூடு தணியும்.தாகம் தீர்க்கும்.பழமும்
விதையும் சிறுநீரகக் கோளாறுகளை நீக்கும். கல்லீரல்,மூளை 
பலம் பெறும்.சிறிது பித்தம் உண்டாக்கும்.

சாத்துக்குடி பழம்:-


இரத்த உற்பத்தி,உடல்பலம்,அறிவுத்தெளிவு உண்டாக்கும்.


சீத்தாப்பழம் :-


உடல்பலம், இருதய பலம் உண்டாக்கும்.ஜீரண சக்தியைக் 
குறைத்து விடும் .சிறிது பித்தம் உண்டாக்கும்.

சப்போட்ட பழம்:-


உடலுக்கு நன்மை தரும்.சிறிது பித்தத்தை உண்டு பண்ணும்.

சீமை இலந்தைப் பழம் ;-

விரை வாதத்தை நீக்கும்.

மாதுளம்பழம் :-


அறிவு விருத்தி,ஞாபகசக்தி உண்டாக்கும்.உடல் சூடு 
சமநிலைப்படும். இருமல் நீங்கும்,தொற்று நோய் கிருமிகளை
அழிக்கும்.புற்று நோயைத் தடுக்கும்.மலச்சிக்கல் தீரும்.
தொடர்ந்து சாப்பிட்டால் மலட்டுத் தன்மை நீங்கும்.

விளாம்பழம் :-


சுவாச கோசத்தைச் சுத்தபடுத்தும்.
சொறி,சிரங்கு ஆறும்.
சிறுவர்க்கு நல்ல நினைவாற்றலை கொடுக்கும்.

இலந்தைப்பழம்:-


இரத்தத்தை சுத்தம் செய்யும்.
வாந்தி,கை,கால் வலிகள் நீங்கும்.
பித்த மயக்கம் தீரும்.

அத்திப்பழம் :-


புதிய இரத்தம் உற்பத்தி ஆகும் .
அத்திப்பழ விதையை உலர்த்தித் தூள் செய்து தேனில்
குழைத்து சாப்பிட்டால் சர்க்கரை வியாதி குணமாகும்.
 .
முலாம்பழம் ;-


சிறுநீர் சம்பந்த மான எல்லாக் கோளாறுகளையும் நீக்கும்.
மலச்சிக்கல் தீரும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

பிரசித்தி பெற்றவை

Powered by Blogger.

மொழி மாற்றம்

பார்த்தவர்கள்

Copyright © மருத்துவம்